வட்டிவிகிதத்தை “சுழியம்” ஆக்குவதற்கு நோர்வே மத்தியவங்கி யோசனை!

You are currently viewing வட்டிவிகிதத்தை “சுழியம்” ஆக்குவதற்கு நோர்வே மத்தியவங்கி யோசனை!

வட்டி விகிதத்தை சுழியம் ஆக்குவதற்கு நோர்வேயின் மத்தியவங்கி ஆலோசனை செய்துவருவதாக தெரிகிறது.

“Norges Bank” மற்றும் “Sentral Bank” ஆகியவற்றின் இயக்குனராக இருக்கும் “Øystein Olsen” தெரிவித்துள்ள தகவல்களின்படி, மிகக்குறுகிய நேரத்தில், நோர்வேயில் வட்டிவிகிதம் சுழியமாக குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

“கொரோனா” பரவலால் உள்ளூர் தொழில் நிறுவனங்கள் பாரிய பொருளாதார பின்னடைவுகளை சந்தித்துள்ள நிலையிலும், பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாலும், பொருளாதார வீழ்ச்சியால் நாடு ஆட்டம் கண்டிருப்பதாலும்,  மேலும் பொருளாதார சிக்கல்கள் ஏற்படுவதை குறைக்குமுகமாக வட்டிவிகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் அமெரிக்கா தனது வட்டிவிகிதத்தை சுழியமாக இறக்கிவிட்டிருப்பதும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலக பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவருமென அஞ்சப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள