வடகொரியா– வடகொரியா நாட்டு மக்கள் 11 நாள்களுக்கு சிரிக்க கூடாது என அதிபர் கிங் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரிய அதிபர்
எப்பொழுதுமே பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் போன நாடுகளில் ஒன்றான வட கொரியாவில், அதிபரின் சர்வாதிகார கட்டளையால் மக்கள் பெரிதும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.
வடகொரியாவில் எப்போதுமே அதிபர் கட்டளைப் படி தான் நாட்டு மக்கள் வாழ முடியும், கட்டளையை மீறினால் மக்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். அந்த அளவுக்கு மக்கள் அஞ்சக் கூடிய வகையில் சர்வாதிகார போக்கை கடைப்பிடிப்பவர் தற்போதைய வட கொரிய அதிபர் கிங் ஜாங் உன்.
அளவோடு சாப்பிடுங்கள்
சமீபத்தில் கூட வட கொரியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்ட போது, மக்கள் அளவோடு சாப்பிடுங்கள் என்று கட்டளையிட்டவர் தான் வட கொரிய அதிபர் கிங் ஜாங் உன்.
வீடு தீப்பற்றி எரிந்தது
இதேபோல் சர்ச்சைக்குரிய சம்பவம் வட கொரியாவில் சில ஆண்டுகளுக்கு முன் அரங்கேறியுள்ளது, ஒரு வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை தீயில் இருந்து காப்பாற்றினார்.
தண்டனை விசித்திரம்
உடனே அப்பெண்ணிற்கு வீர சாகச விருந்து அரசு சார்பில் அளிக்கப்பட்டது என்று யாரும் எண்ண வேண்டாம், மாறாக அந்தப் பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதற்கு சொன்ன காரணம் தான் விசித்திரம், என்னவென்றால் குழந்தையை காப்பாற்றும் பொழுது அந்த வீட்டில் இருந்த அதிபரின் புகைப்படத்தை அவர் காப்பாற்றவில்லை, என்பது தான். அதிபரின் புகைப்படம் எரிந்ததால் இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.
அதிபர் படம் கட்டாயம்
பின்பு இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, அதிபரின் புகைப்படங்களை வீட்டில் அனைவரும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சர்ச்சை உத்தரவு
இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய உத்தரவு வட கொரிய அதிபர் கிங் ஜாங் உன் உலக நாடுகளை எல்லாம் தன் பக்கம் திரும்பிப் பார்க்கும் வகையில் பிறப்பித்துள்ளார்.
11 நாள் சிரிக்க தடை
அவர் போட்ட உத்தரவு என்னவென்றால்; நாட்டு மக்கள் யாரும் 11 நாள்களுக்கு சிரிக்கக் கூடாது என்பது தான் அந்த உத்தரவு. 2011-ம் ஆண்டு மறைந்த வட கொரிய முன்னாள் அதிபரும், கிம் ஜாங் உன்-னின் தந்தையுமான ஜிம்-ஜொங் -இல் அவர்களின் 10-ம் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு நாட்டில் 11 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்காரணமாக நாட்டு மக்கள் யாரும் 11- நாள்களுக்கு சிரிக்கக் கூடாது என்பது அதிபரின் உத்தரவு.
துக்க காலம்
மேலும் 11 நாள் துக்க காலத்தில் வடகொரிய நாட்டு மக்கள் மது அருந்தவோ, சிரிக்கவோ, பொதுபோக்கு கொண்டாட்டங்களில் ஈடுபடவோ தடை விதிக்கப்படுகிறது. துக்க காலம் முடிந்த பின்னர் தான் உடலை அடக்கம் செய்ய வேண்டுமாம். அதுவரை உடலை வீட்டில் பத்திரமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாம்.
ஜனநாயகம் மலர வேண்டும்
வடகொரிய மக்களின் பரிதாப நிலையைக் கண்டு சமூகவலைத்தளங்களில் பலதரப்பினரும் வடகொரிய மக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். அங்கு மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்றும் விரைவில் வட கொரியாவில் ஜனநாயகம் மலர வேண்டுமென்றும் கருத்திட்ட வருகின்றனர்.