மத விழுமியங்களை கருத்தில் கொண்டு வணக்கத்தலங்களில் வரும் 18 ஆம் திகதி மாலை 6.15 மணி முதல் 6.18 மணி வரை, மணிகளை ஒலிக்கச் செய்து தொடர்ந்து, விளக்கேற்றி விசேட பூசை வழிபாடுகளைச் செய்யுமாறு யாழ். மாவட்ட சர்வ மதப் பேரவையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் தொடர்பாக யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையினர் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
“எமது நாட்டில் 11 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு மரண அவலம் நடந்தேறியது. அதனை ஒவ்வொரு ஆண்டும் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்து வருவதுண்டு. இந்த ஆண்டு கொரோனா சூழ்நிலை காரணமாக எமது அஞ்சலிகளை வீடுகளில் இருந்து நிறைவேற்ற அழைக்கப்படுகின்றீர்கள்.
மதத் தலைவர்களாக, மத விழுமியங்களை கருத்திற் கொண்டு வணக்கத்தலங்களில் வரும் 18 ஆம் திகதி மாலை 6.15 மணி முதல் 6.18 மணி வரை மணிகளை ஒலிக்கச் செய்து, தொடர்ந்து விளக்கேற்றி விசேட பூசை வழிபாடுகளைச் செய்யுமாறு யாழ். மாவட்ட சர்வ மதப் பேரவையின் மதத் தலைவர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.