முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் உள்ள வனவளத்திணைக்கள உத்தியோத்தர் ஒருவரை தாக்க திட்டமிட்ட நான்குபேர் கொண்ட கும்பல் ஒன்றை துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
T-56 துப்பாக்கி ரவைகள் 6, ஈயகுண்டு 1,ஈயத்தினால் குத்தும் கம்பிகள் 44, என்பன மீட்கப்பட்டுள்ளன.
விக்டர் குறுப்புடன் சம்மந்தப்பட்ட ஒருவரின் தலைமையின் கீழ் நான்கு போர் கொண்ட கும்பல் குறித்த பிரதேச்தில் நேற்று பொதுமகன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் குமுழமுனை பிரதேசத்தில் உள்ள வனவளத்திணைக்கள உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்த திட்மிட்டுள்ளார்கள் ,
இன்னிலையில் முல்லைத்தீவு பொலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து 11.10.2020 இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.குமுழமுனை பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை குமுழமுனை பிரதேச வனவளத்திணைக்கள உத்தியோகத்தருக்கு சட்டவிரோத கும்பலால் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டினை தொடர்ந்து குமுழமுனை பிரதேசத்தில் உள்ள வனவளத்திணைக்கள அலுவலகத்திற்கு பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.