சிறீலங்காவுக்கான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தயாராகியுள்ள நிலையில் அதற்கான திட்டமிடல் கூட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அந்தவகையில் வன்னி பெருநிலப்பரப்பிலும் நடைபெற்றுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது தொடர்ந்தும் தமிழ்மக்களின் விடுதலை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காது சிறீலங்காவின் அடக்குமுறைக்கு எதிராக அரசியல் போர் புரிந்து வருகின்றது.
ஆகவே தனித்துவமாக தமிழருக்காக உறுதியாக பயணிக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மீது அவதூறுகளை பரப்பி அடிவருடி அரசியல் வாதிகள் தமிழ்த்தேசிய அரசியலிருந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை தனிமைப்படுத்துவதற்கு அதிகார வர்க்கங்களோடு கைகோர்த்து வருகின்றபோதும் மக்களின் நிலையான அரசியலுக்காக இற்றைவரை துணிச்சலாகவும் உறுதியோடும் உரிமைக்காக போராடிவருகின்றார்கள் எனவே உண்மையும் நேர்மையும் ஒருபோதும் தோற்காது வென்றெதீரும்.