இன்று வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான பணிமூலம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் மக்கள் ஆகியோர் இணைந்து இந்த துப்பரவு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது வன்னிவிளாங்ளும் வீதி முற்றுமுழுதாக பொலீசார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வீதியால் செல்பவர்களை விசாரிக்கும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
நண்பகர் 1.00 மணிவரை நடைபெற்ற சிரமதான பணியின் போது பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்றி சிரமதானத்தில் ஈடுபட்டாலும் சிரமதானம் முடியும் வரை வீதியில் படையினர் பொலீசார் ஒளிப்படம் எடுத்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
வன்னிவிளாங்குளத்தில் குவித்த படையினரும் பொலீசாரும்!
