வரலாறு நிமிர்ந்த நாள்!

You are currently viewing வரலாறு நிமிர்ந்த நாள்!

வானமதிர்ந்திட
வையகம் நிமிர்ந்திட
பொய்யா விளக்காய்
பெரு நெருப்பு
முகில்களை கிழித்திட
இயந்திரப் பறவை
தமிழரின் பெயரால்
தலைவனின் செயலால்
தருக்கரின் தலைகளை
நொருக்கிட பறந்தது!

கந்தக்குண்டுகளை
சுமந்து
எந்தையர் தலையில்
போட்டவனை
வான்புலி மறவர்
விண்ணிலே ஏறி
வீணரைச் சாய்த்தனர்!

களத்திலே
நேரிடை போர்புரிய
முடியா கயவர்
வானிடை ஏறி
குழந்தைகள்
குஞ்சுகளை
கோரமாய்க்
கொன்றனர்!

வான்புலி மறவர்
ஒற்றைக் குழந்தையை
கொல்லாது
மனிதத்தைக் காத்து
அறத்தின் மாண்பினை
மதித்தனர்!

மூவேந்தர் வழிவந்து
முப்படை கட்டி முடித்து
முதற்களமாடி
அதர்மத்தின் கொட்டமடக்கிய
கொற்றவன் முடிசூடிய
நாளிது!

தன்னினத்தின் பொருளாதாரத்தின்
துணைகொண்டு
வன்னிக் காட்டுக்குள்
வடிவமைத்து
எண்ணிலடங்க
கண்களில்
மண்ணைத்தூவி
விண்ணிலே சாகசம்
நிகழ்த்தியநாள்!

எத்தனை தடைகள்
எத்தனை மிரட்டல்கள்
எல்லாம் சுற்றிவர இருந்தும்
தான் நினைத்ததை
தன் இனத்திற்காக
வராலாற்றில்
இன்று
எழுதிவைத்தவர்
எங்கள் தலைவர்!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள