தென் தமிழீழம் , மட்டக்களப்பு செங்கலடியில் இன்று காலை வடகிழக்கு மாகாணத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நடாத்தவிருந்த போராட்டம் சிங்கள பொலிஸார் நீதிமன்றின் ஊடாக பெறப்பட்ட தடையுத்தரவினால் இடைநிறுத்தப்பட்டது.
வடகிழக்கில் உள்ள வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பினர் இணைந்து செங்கலடியில் இன்று காலை கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
வட தமிழீழம் யாழப்பாணம்முல்லைத்தீவுஇகிளிநொச்சி வவுனியாஇமன்னார்இமட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் இந்த போராட்டங்களை முன்னெடுக்கவிருந்தனர்.
தற்போது தேர்தல் நிலைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் வடகிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியத்திற்கும் தமிழர்களின் பிரச்சினைக்கு ஆதரவாகவும் செயற்படுவோரை தெரிவுசெய்யவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லும் வகையிலும் இந்த போராட்டம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவிருந்தன.
இந்த நிலையில் இன்று காலை செங்கலடியில் வடகிழக்கின் எட்டு மாவட்டங்களில் இருந்து வருகைதந்த காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடிய நிலையில் அங்குவந்த பொலிசார் குறித்த போராட்டத்தினை நடாத்தமுடியாது எனவும் தெரிவித்தனர்.
பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவினை காட்டி போராட்டம் நடாத்தமுடியாது என தெரிவித்தனர்.
ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் ஊடாக இந்த தடையுத்தரவு ஏறாவூர் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.
தாம் போராட்டம் நடாத்துவதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே சுகாதார பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் இது தொடர்பில் அறிவித்திருந்ததாகவும் ஆனால் பொலிஸார் திட்டமிட்டு தமது போராட்டத்தினை முடக்கியுள்ளதாகவும் காணாமல்போனோர் உறவினர்கள் தெரிவித்தனர்.