வல்லை வெளியில் விபத்து – இளைஞன் பரிதாப மரணம்!

You are currently viewing வல்லை வெளியில் விபத்து – இளைஞன் பரிதாப மரணம்!

யாழ்.வடமராட்சி – வல்லை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தல் நெல்லியடி திருமகள் சோதி பஸ் தரிப்பிட ஒழுங்கையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கவிதாசன் (வயது 24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரேவந்த ஆட்டோவுடன் மோதி பின்னர் பட்டா வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் பருத்தித்துறை வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply