வல்வெட்டித்துறை றேவடி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரிய வள்ளங்கள் 13 பலத்த காற்றினால் சேதமடைந்துள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வள்ளங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கான கல்லணைகளை அமைத்துத் தருமாறு
போருக்குப் பின்னரான 15 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சிப்பீடமேறிய அரசாங்கத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்படது. எனினும் அரசாங்கங்கள் எதனையும் செய்யவில்லை. காரணம் கடற்தொழிலிருந்து தமிழர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்பதே அரசின் திட்டமாகும்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்களாவது குறித்த கல்லணையை கட்டியெழுப்ப முன்வர வேண்டுமென கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.