வழமைக்கு திரும்பும் நோர்வே! கவலை கொள்ளும் ஒஸ்லோ மாநகர நிர்வாகத்தலைவர்!!

You are currently viewing வழமைக்கு திரும்பும் நோர்வே! கவலை கொள்ளும் ஒஸ்லோ மாநகர நிர்வாகத்தலைவர்!!

“கொரோனா” கட்டுப்பாடுகளிலிருந்து நோர்வே வழமை நிலைக்கு திரும்புவதற்கான ஏற்படுகள் மேற்கொள்ளப்படுமென நாட்டின் பிரதமர், “Erna Solberg” அம்மையார் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து தலைநகர் ஒஸ்லோவின் நிர்வாகத்தலைவர் “Raymond Johansan” அதிருப்தியும், கவலையும் வெளியிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் அரசு அறிவித்திருந்த கட்டுப்பாடுகள் தொடர்பில் படிப்படியான இளக்க நிலைகள் கொண்டுவரப்பட்டு, நாடு வழமையான நிலைக்கு வருவதற்கான நடவடிக்கைகள் 16.04.21 முதல் மேற்கொள்ளப்படுமென பிரதமர் அறிவித்துள்ளார். எனினும், உள்ளூர் நகராட்சிகள், தத்தமது நகராட்சி எல்லைகளுக்குள் தனியான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ள நிலையில், நாடு முழுவதும் அரசு விடுத்திருந்த கட்டுப்பாடுகளில் மட்டுமே இளக்க நிலை கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், நாடளாவிய ரீதியிலான இளக்க நிலை கொண்டுவரப்படுமிடத்து, வெளிநாடுகளிலிருந்து தொழில் நிமித்தம் நோர்வேக்குள் வரும் தொழிலாளர்களின் தொகை அதிகரிக்குமெனவும், குறிப்பாக இவர்களில் அநேகமானவர்கள் தலைநகர் ஒஸ்லோவையே மையப்படுத்தி வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதால், “கொரோனா” தொற்று மீண்டும் அதிகரிக்கும் நிலைமை உருவாகுமென மாநகர நிர்வாகசபைத்தலைவர் விசனம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒஸ்லோ மாநகர எல்லைக்குள் விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் இன்னும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என மாநகர நிர்வாகத்தலைவர் அறிவித்துள்ளார். நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் இளக்க நடவடிக்கைகள், ஒஸ்லோ மாநகர எல்லைக்குள் நடைமுறையிலிருக்கும் கட்டுப்பாடுகளுக்கு பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply