வவுனியாவில் கொரோனா தடுப்பு மையம், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

You are currently viewing வவுனியாவில் கொரோனா தடுப்பு மையம், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களை தென்னிலங்கையில் வைத்து சிகிச்சை அளிக்க சிங்களவர்கள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், வவுனியா பம்பைமடுவில் கொரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

வவுனியா பம்பைமடுவில் உள்ள பெண்கள் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு நேற்று (13) மாலை 7.00 மணியளவில் விமானப் பயணிகள் கொண்டு வரப்பட்டனர்.

தொழில் நிமித்தம்  இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டுக்கு சென்ற சிங்களவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், 14 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்துக்கு இந்த வாரம் முதல் பகுதியில் சிலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வவுனியா தடுப்பு முகாமுக்கு 05 பஸ்களில் 265 விமானப் பயணிகள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டனர்.

வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள தடுப்பு முகாமுக்கே தற்போது அவர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். 

இந்தச் செயற்பாட்டுக்கு வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வவுனியா தெற்குத் தமிழ் பிரதேச சபையின் தலைவர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்
 

பகிர்ந்துகொள்ள