வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் சலூன் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள சலூன் ஒன்று பூட்டப்பட்டிருந்த நிலையில் இரவு அதன் கதவை உடைத்து உள்ள சென்ற நபர்கள் அங்கு உள்ள பண வைப்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். காலை அதன் உரிமையாளர் சென்ற போது சலூன் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
வவுனியாவில் சிகை அலங்கார நிலையம் உடைத்து கொள்ளை!
