வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி !

You are currently viewing வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி !

வவுனியா தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.

இன்றையதினம் வவுனியா தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு தனது குடும்பத்துடன் வருகைதந்திருந்த இளைஞர் ஒருவர் நீச்சல்குளத்தில் இறங்கி குளித்துக்கொண்டிருந்த வேளையில்  நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கண்டி நாவலப்பிட்டியை சேர்ந்த 18 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது

சடலம் செட்டிகுளம் பிரதேசவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply