2005ஆம் ஆண்டு இதேநாள் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் எனும் தர்மரத்தினம் சிவராம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (29.04.2020) புதன்கிழமை வவுனியாவில் நினைவேந்தப்பட்டது.

வவுனியா – ஏ9 வீதிக்கு அருகே போராட்டப் பந்தல் அமைத்து சுழற்சி முறையில் 1,167 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இந்த நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மாமனிதர் தராகியின் திரு உருவப்படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.



