வவுனியா – மன்னார் வீதியில் மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளான நிலையில், நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
மற்றுமொரு நபர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பூவரசன் குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார், பறயநாலங்குளம் பகுதியில் இருந்து இரணடு இளைஞர்கள் வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதில் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 35வயதுடைய நிமல் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம்(18) துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் , சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் .மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.