வவுனியாவில் 109 பேருக்கு தொற்று! – 13 பேர் இராணுவத்தினர்!

You are currently viewing வவுனியாவில் 109 பேருக்கு தொற்று! – 13 பேர் இராணுவத்தினர்!

வவுனியாவில் மேலும் 109 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.

அதில், ஈரப்பெரியகுளம் இராணுவ முகாமில் பதின்மூன்று பேருக்கும், கற்பகபுரம் பகுதியில் பத்து பேருக்கும், கோயில்புதுக்குளம் பகுதியில் இருவருக்கும், உக்குளாங்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், வவுனியாவில் பணிபுரியும் புத்தளத்தை சேர்ந்த ஒருவருக்கும், மதவாச்சி பகுதியில் ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், நவகமுக பகுதியில் ஒருவருக்கும், குடியிருப்பு பகுதியில் மூன்று பேருக்கும், தட்டான்குளம் பகுதியில் இருவருக்கும், செக்கட்டிப்புலவு பகுதியில் இரண்டு பேருக்கும், வவுனியா பொலிசார் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் மூன்று பேருக்கும், கள்ளிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகா நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கும், மதியாமடு பகுதியில் மூன்று பேருக்கும், நெளுக்குளம் பகுதியில் ஆறு பேருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஐந்து பேருக்கும், குருக்கள்புதுக்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், நேரியகுளம் பகுதியில் இரண்டு பேருக்கும், பெரியஉளுக்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், உளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், வேப்பங்குளம் பகுதியில் எட்டு பேருக்கும், கிடாச்சூரி பகுதியில் ஒருவருக்கும், புதியசாளம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தவசிகுளம் பகுதியில் இரண்டு பேருக்கும், கப்பாச்சி பகுதியில் ஒருவருக்கும், ஓமேக்காவில் பணிபுரியும் ஒருவருக்கும், ஈச்சங்குளம் பகுதியில் ஒருவருக்கும், மதீனாநகர் பகுதியில் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், சமயபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஒமந்தை பகுதியில் ஒருவருக்கும், மில்வீதியில் ஒருவருக்கும், மடுகந்த பகுதியில் இரண்டு பேருக்கும், அம்பலாங்கொட பகுதியில் இரண்டு பேருக்கும், போகஸ்வேவ பகுதியில் இரண்டு பேருக்கும், மகாகச்சகொடி பகுதியில் இருவருக்கும், குட்செட் வீதி பகுதியில் மூன்று பேருக்கும், செல்வாநகர் பகுதியில் ஒருவருக்கும், மணிபுரம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், இறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், வவுனியா வைத்தியசாலை விடுதியில் மூன்று பேருக்கும் என 109 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், 42 பேர் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் தாமாக முன்வந்து வவுனியா வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை என்பவற்றில் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply