வடக்கில் 15 பேர் பேருக்கு கொரோனா!

You are currently viewing வடக்கில் 15 பேர் பேருக்கு கொரோனா!

வவுனியாவில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 24 ஆம் திகதி மரணமடைந்திருந்தார்.

அவருடன் தொடர்புடையவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. அதில் வவுனியா வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நெடுங்கேணி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் 8 பேரையும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை

யாழ்ப்பாணத்தில் 12 பேர் அடங்கலாக வடக்கில் நேற்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையைச் சேர்ந்தவர்கள் 6 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கும், உடுவில் வைத்திய அதிகாரி பிரிவில் பாடசாலை ஒன்றின் அதிபர், ஆசிரியராகச் சேவையாற்றுபவர்கள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளரு், அவர்களில் இருவர் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் பருத்தித்துறை நீதிமன்ற உத்தியோகத்தரான மற்றவரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களாக பணியாற்றுகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

பகிர்ந்துகொள்ள