கடலில் மூழ்கிய இளைஞர்கள் மூவரின் சடலங்களும் மீட்பு!

You are currently viewing கடலில் மூழ்கிய இளைஞர்கள் மூவரின் சடலங்களும் மீட்பு!

முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்ற மூவரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன இருவரை தேடும் பணிகள் தொடர்கின்றன.

குறித்த மூவரையும் நீண்ட நேரமாக காணாத நிலையில் அவர்களுடன் கடலுக்கு சென்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த யுவதி முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து அவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

தேடுதலின் போது ஒருவருடைய உடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏனைய இருவரையும் தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது.

குறித்த இளைஞர்களில் , சிவலிங்கம் சமிலன் (வயது_26) , தோணிக்கல் பகுதியை சேர்ந்த விஜயகுமாரன் தர்சன் (வயது_26) ஆகியோரே கடலில் மாயமாகியுள்ளனர்.

27 அகவையுடைய மனோகரன் தனுசன் என்ற இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரின் உடலங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள்,கடற்றொழிலாளர்கள் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை

வவுனியா, மதகுவைத்தகுளம் பகுதியினை சேர்ந்த 27 அகவையுடைய மனோகரன் தனுசன், தோணிக்கல்லை சேர்ந்த 26 அகவையுடைய விஜயகுமாரன் தர்சன், மதவுவைச்சகுளத்தினை சேர்ந்த 26 அகவையுடைய சிவலிங்கம் சகிலன் ஆகியோரே கடலில் காணாமல்போயுள்ள நிலையில் 27 அகவையுடைய மனோகரன் தனுசன் என்ற இளைஞனின் உடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரின் உடலங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள்,கடற்றொழிலாளர்கள் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடலில் இறங்கி தேடமுடியாத நிலையில் சடலம் கடலலையில் அடித்து கரை ஒதுங்கும் அல்லது கரைபகுதியில் சடலத்தின் அசைவு ஏதும் தெரியும் என்ற நம்பிக்கையில் கடற்கரையில் காத்திருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் இரண்டு இளைஞர்களின் உடலங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடற்கரையில் காத்திருந்த நிலையில்  முல்லைத்தீவு கடலில் மூழ்கிய மூவரில் இரண்டாவது உடலம் தீர்த்தக்கரை பகுதியில்  மீட்கப்பட்டுள்ளது ..

மூன்றாவது சடலம்

தற்போது முல்லைத்தீவின் அளம்பில் கடற்பரப்பில் சடலம் மிதந்த நிலையில் படகில் தேடுதல் நடத்தியவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அது மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தை கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இறுதியாக மீட்கப்பட்டவர் தோணிக்கல், வவுனியா என்ற முகவரியைச் சேர்ந்த விஜயகுமாரன் தர்சன் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply