முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் சிங்கள பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில், “தமிழின அழிப்பு நினைவு ஊர்திப் பவனி” (14.05.2025) யாழ் நல்லூரிலிருந்து ஆரம்பமாகியது.
குறித்த ஊர்திப்பவனியனது நாவற்குழி பரந்தன் கிளிெநொச்சி சந்தை மாங்குளம் ஊடறுத்து நேற்று (16.05.2025) வவுனியாவை வந்தடைந்த நிலையில் இன்று 17.05.2025 இன்று வவுனியா புளியங்குளம் பகுதியில் சிங்கள அரசு நடத்திய தமிழின அழிப்பை எடுத்தியம்பி பயணித்துக்கொண்டிருக்கின்றது.





