வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்துகொண்ட 2021ம் ஆண்டுக்கான “தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள்” நவம்பர் 27 அன்று உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது. கடற்புலி கப்டன் கிருபன், மேஜர் நகுலன் ஆகியோரின் உறவினரும், முன்னாள் போராளியுமாகிய பார்த்தீபன் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். நினைவேந்தலை அனுட்டிப்பதற்கு வவுனியா பொலிஸார் நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைமைக்குழு உறுப்பினர்களால் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 2021ம் ஆண்டுக்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.








