வவுனியா வைத்தியசாலையில் இவ்வாண்டு இதுவரை மாரடைப்பால் 45 பேர் மரணம்!

You are currently viewing வவுனியா வைத்தியசாலையில் இவ்வாண்டு இதுவரை மாரடைப்பால் 45 பேர் மரணம்!

வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாரடைப்பால் இறந்தவர்கள் தொடர்பில் கேட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 20 வயது தொடக்கம் 40 வயது வரையானவர்களில் ஒருவரும் 40 தொடக்கம் 60  வயது வரையானவர்களில் 13 பேரும் 60 தொடக்கம் 100 வயது வரையானவர்களில் 31 பேருமாக 45 பேர் இவ்வாறு மாரடைப்பால் மரணமாகியுள்ளனர்.

அண்மைக்காலமாக வவுனியாவில் மாரடைப்பால் மரணிப்போரின் தொகை அதிகரித்து காணப்பட்ட நிலையில் அதற்கான பல்வேறு காரணங்களும் சுகாதார திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply