வாகரை மக்களை மூர்க்கமாகத் தாக்கிய சிறீலங்காவின் வன இலாகா!

You are currently viewing வாகரை மக்களை மூர்க்கமாகத் தாக்கிய சிறீலங்காவின் வன இலாகா!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் எல்லை கிராமமான கட்டுமுறிவை அண்டிய பகுதிகளில் 25 தொடக்கம் 30 வருடங்களுக்கு மேலாக வாழும் மக்களை வன இலாகா என கூறிக்கொண்டு அங்கு சென்ற அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.

அத்தோடு, மானிடவியலுக்கு ஒவ்வாத நடைமுறைகளை அம்மக்களின் மீது திணித்து தாக்கியதையடுத்து அங்குள்ள மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத்தின் கவனத்திற்கு உடன் கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (25) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் நேரடியாக தொடர்பு கொண்டு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று (25) இரண்டு மணியளவில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட புச்சாக்கேணி கிராமசேவகர் பிரிவில் உள்ள நான்காம் கட்டை பகுதிக்குச் சென்ற வனவள இலகா பிரிவினர் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களை அச்சுறுத்தி அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என அச்சுறுத்தியதோடு மூன்று பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்காக தகவல்களைச் சேகரித்து சென்றுள்ளனர்.

அத்தோடு, அங்கு வசித்த மக்களின் குடியிருப்புகளைத் தீக்கிரையாக்கியுள்ளதுடன், அங்குள்ள மக்களையும் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply