வாக்குகளுக்காக நாடகம் ஆடும் அனுரா அரசு!

You are currently viewing வாக்குகளுக்காக நாடகம் ஆடும் அனுரா அரசு!

ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் படுகொலை, காணாமல் போன லலித் குகன் உட்பட முக்கிய ஏழு சம்பவங்கள் குறித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகளையும் தீவிரப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் சிஐடியினருடனும் உரிய பொலிஸாருடனும் இணைந்து செயற்படுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு தரப்பு பதில் பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,இலங்கையின் பிரபல வர்த்தகர் தினேஸ் ஸ்காப்டரின் மரணம்,வெலிகமவில் டபில்யூ 15 ஹோட்டலிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டமை குறித்தும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும் இது வெறும் செய்தியாகவே பார்க்கப்படுகிறது பாராளுமன்ற தேர்தலில் அதிகடிபயான வாக்ககளை பெற்று பலமான அனுரா ஆட்சியை உருவாக்குவதற்காக பல அதிரடிவிடயங்கள் வெறும் செய்திகளாக கசியவிடப்படுகின்றது இவை அனைத்தும் அதிக வாக்குகளை பெறுவதற்கான அலப்பறைகள் என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொண்டால் போதுமானது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply