யாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிறீலங்கா காவற்துறையினருக்கு வாக்குமூலம் வழங்கிய நபரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மானிப்பாய் பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் புகுந்து அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மானிப்பாய் சிறீலங்கா காவற்துறை இளைஞன் ஒருவரை அழைத்து வாக்கு மூலத்தை பதிவு செய்திருந்தனர்.
சிறீலங்கா காவற்துறையினருக்கு வாக்குமூலம் அளித்த இளைஞனின் வீட்டுக்கு நேற்றுமுன் தினம் புதன்கிழமை அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி,மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.