உக்ரைன் விவகாரம் அதியுச்ச நிலையை எட்டியுள்ள நிலையில், எதிர்வரும் சில மாதங்களில் உக்ரைன் மீதான பெரும் இராணுவ நடவடிக்கையொன்றுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக, உக்ரைனிய உளவுப்பிரிவு அறிக்கையிட்டுள்ளதாக, உக்ரைனிய படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் இளவேனில் காலம் ஆரம்பிக்கும் மார்ச் மாதம் தொடக்கம், கோடைகால நிறைவான ஓகஸ்ட் மாத இடைப்பகுதியில் இப்பெரும் இராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்படுவதோடு, மேற்படி இராணுவ நடவடிக்கை உக்ரைன் விவகாரத்தில் ஒரு முடிவை எட்டும் எனவும், ரஷ்யாவை பொறுத்தவரை அது வாழ்வா, சாவா என்கிற மிக முக்கியமான நிலை எனவும் உக்ரைனிய பாதுகாப்புத்தரப்பு மேலும் தெரிவிக்கிறது.
இதேவேளை, உக்ரைனுக்கு கணிசமான கனரக ஆயுதங்களை அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, நோர்வே, சுவீடன் உள்ளிட்ட நாடுகள் வழங்க, ரஷ்யாவும் வட – கொரியா, சீனா, ஈரானிடமிருந்தும் கணிசமான ஆயுதங்களை வரவழைப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.