யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டியில் சட்ட விரோதமாக தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட திஸ்ஸ என்ற சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை அகற்றக் கோரியும்,

விகாரை அமைத்த காணி உட்பட அதனுடன் இணைத்து விகாரைக் கென அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல பரப்புக்களைக் கொண்ட மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைக்கக் கோரியும்,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தொடர்ச்சியாக பல எதிர்ப்புப் போராட்டங்கள் நடாத்தியும், நடாத்தப்பட்டும் வரும் நிலையில்,

இன்று ( 12.09.2023)  செவ்வாய்க்கிழமை  விகாரை அமைத்த காணி உட்பட அதனுடன் இணைத்து ஆக்கிரமிக்கப் பட்டுள்ள காணிகளை விகாரைக்கென நில அளவைத் திணைக்களம் அளவீடு செய்து கையகப் படுத்த எடுத்த முயற்சிக்கு எதிராக,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் காணிகளின் உரிமையாளர்கள்,சமூகஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் திரண்டதால் நில அளவீட்டுப் பணிக்கு அளவீட்டாளர்கள் வருகை தருவதைத் தவிர்த்துள்ளனர்.

தையிட்டி சட்டவிரோத விகாரை காணி உட்பட அதனுடன் இணைத்து  விகாரைக் கென ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் காணிகளை நில அளவைத் திணைக்களம் அளவீடு செய்து கையகப் படுத்த உள்ளதனையும் அதனைத் தடுப்பதற்கு அனைவரையும் தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு ( 12.09.2023) செவ்வாய்க்கிழமை காலை -8.30,மணிக்கு வருகை தருமாறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பிற்கு இணங்க இன்று – காலை  பெருமளவானோர் அவ்விடத்தை வந்தடைந்திருந்ததனை
அடுத்து நில அளவைத் திணைக்களத்தினர் வருகை தராது இன்றைய நாள் நில அளவுப் பணிகளை மேற்கொள்வதைத் தவிர்த் திருக்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது.

இன்றைய இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் -பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன்,

மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்-சிறீதரன், அரசியல் பிரமுகர்        கந்தையா-அருந்தவபாலன், உட்பட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் காணிகளின் உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள்,மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விகாரைக்கு என ஆக்கிரமிக்கப் பட்ட காணிகளின் அளவீடு இன்று தடுத்து நிறுத்தம் ! 1

விகாரைக்கு என ஆக்கிரமிக்கப் பட்ட காணிகளின் அளவீடு இன்று தடுத்து நிறுத்தம் ! 2

 

விகாரைக்கு என ஆக்கிரமிக்கப் பட்ட காணிகளின் அளவீடு இன்று தடுத்து நிறுத்தம் ! 3

விகாரைக்கு என ஆக்கிரமிக்கப் பட்ட காணிகளின் அளவீடு இன்று தடுத்து நிறுத்தம் ! 4

பகிர்ந்துகொள்ள
 நாளாந்த செய்திகள்

பொங்கும் தமிழைப் பொலிவுறச்செய்வோம்;
எங்கள் மண்ணை விடிவுறச்செய்வோம்.

நோர்வேயில் முதன்மைத்
தமிழ் வானொலி.

© 2025 தமிழ்முரசம்

error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!