பல்லாயிரம் தியாகங்களில்
அன்னை பூபதியம்மாவின் தியாகம்
அணையா விளக்காய் அகிலத்தை
ஆள்கின்றது!
தியாகச் செம்மல்
திலீபனின்
தியாகத்தின் வழி
உலகத்தின் முதல் பெண்மணியாய்
முதிர்ந்த வயதிலும்
பட்டிணிப் போர்தொடுத்து
நிமிர்ந்து நின்றாய் தாயே!
தமிழின விடுதலையின்
கட்டியம் கூறி நின்ற
புனிதப் போரில்
பெண்ணியத்தின்
பெரும் தியாகத்தில்
வரமாய் வந்துதித்தாயம்மா!
அமைதியென்ற கோரமுகத்தை
கிழித்தெறிந்து
அண்ணன் வழி நின்று
பயங்கரவாதியென
திட்டம் போட்டு பட்டம்
சூட்டியவனின்
பயங்கரவாத முகத்தினை
இனம் காட்டி
நியாயத்தினை
நிலை நாட்டினாய்
தாயே!
குருந்தைமரத்தில் உருகி நின்ற
பருதியொன்றின் ஒளியிழந்து
இருள் சூழ்ந்த போதிமரத்தில்
சூனியமாய் போனதம்மா
ஈழத்தமிழன் வாழ்வு!
அறத்தின் ஆழத்தை
அவனியில் நிலைநாட்டி!
காந்திதேசத்தின் கோரமுகத்தினை
உலகிற்கு நீ காட்டி!
பட்டினித்தீயில் உனை மூட்டி!
நெஞ்சை விட்டகலாத விடுதலைத் தேரோட்டியாய்!
நீ இதயத்தை ஆள்கிறாய்
அம்மா!
✍தூயவன்