விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் சாமிநாதன் பிணை நிராகரிப்பு!

You are currently viewing விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் சாமிநாதன் பிணை நிராகரிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் தாக்கல் செய்த பிணை மனுவை கோலாலம்பூர் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பு மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவரது பிணை கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிணை மனுவை தள்ளிப்படி செய்த நீதவான், பொதுவாக, மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதித்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

கடந்த 20 ஆம் திகதி இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் காடேக் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி முகநூல் கணக்கு மூலமாக புலிகளுக்கு ஆதரவு வழங்கியதாக, தண்டனைச் சட்டம் பிரிவு 130 ஜே (1) கீழ் சாமிநாதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்பதோடு அவர் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த விரும்பிய அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள