பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படிருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பரப்புரை செய்து வருகின்றது.
உண்மையில் என்ன நடந்துள்ளது? தடை நீங்கி விட்டதா? இது பற்றி எமது சட்ட நிபுணர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
- தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு 2001 ஆம் ஆண்டு பிரித்தானிய உள்துறை செயலர் எடுத்த முடிவு சரியானது என்று தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டு ஆணையம் (Proscribed Oranisations’ Appeals Commission) தெரிவித்துள்ளது.
- எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு பிரித்தானிய உள்துறை செயலர் முன்வைத்திருக்கும் காரணங்களில் குறைபாடுகள் (flaws) இருப்பதாக ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
- இதன் அர்த்தம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை உடனடியாக நீங்கியது என்பதல்ல
- தடையை நீக்கும் உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு உண்டு. ஆனால் அவ்வாறான உத்தரவை அது இன்றைய தீர்ப்பில் பிறப்பிக்கவில்லை.
- இன்றைய தீர்ப்பின் விளைவாக இரு தரப்புக்கும் (வழக்குத் தொடுநருக்கும், பிரித்தானிய அரசாங்கத்திற்கும்) என்ன நிவாரணம் (relief) வழங்குவது என்பது பற்றிப் பிறதொரு அமர்வு/விசாரணை ஊடாகவே தீர்மானிக்க முடியும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
- ஆக ஆணையத்தின் தீர்ப்பால் உடனடியாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீங்கவில்லை.