மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் டென்மார்க் சுவீடன் போன்ற நாடுகளின் ஆபத்தான கொரோன தொற்று இடங்களுக்கு விடுமுறைக்கு சென்றோர் எதிர் வரும் சனிக்கிழமை (15/08) இரவு 12 மணிமுதல் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என நோர்வே சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இத் தகவலை இன்று திங்கட்கிழமை குறுந்தகவல் மூலம் வெளிநாடுகளில் நிற்போருக்கு சுகாதாரத்துறை அனுப்பிவைத்துள்ளது.
குறிப்பாக சுவீடனில் 6 இடங்களிலும் டென்மார்க்கில் 2 இடங்களிலும் போலாந்து,மால்டா,ஸ்லான்ட்,சைபிரஸ் நெதர்லாந்து போன்ற நாடுகளில் தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் இந்நாடுகளில் விடுமுறை கழிப்போருக்கும் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.