சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான “ISS” இற்கு உல்லாசப்பயணிகளை அழைத்துச்செல்லும் திட்டத்தை, அமெரிக்க தனியார் நிறுவனமான “Axiom” ஆரம்பித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவுடன் மேற்படி நிறுவனம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, “Space – X” என்ற விண்ணோடத்தோடு இணைக்கப்படவிருக்கும் “Crew – Dragon” என்ற, மனிதர்கள் பயணிக்கக்கூடிய பகுதியில் 3 பயணிகளையும், இந்நிறுவனத்தின் ஒரு பணியாளரையும் அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு பயணிக்கான கட்டணமாக 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்படுமெனவும், விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வுமையமான “ISS” இல் தங்கியிருப்பதற்கான கட்டணமாக நாளொன்றுக்கு 35.000 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இப்பயணத்துக்காக இதுவரை 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி ஒருவர் ஆசன முன்பதிவு செய்துள்ளதாகவும், 2021 ஆம் ஆண்டில், திட்டமிட்டபடி இப்பயணம் நடைபெறுமெனவும் மேற்படி “Axiom” நிறுவனம் தெரிவித்துள்ளது.