இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியவாளர் சந்திப்பில் நீதி மற்றும் அவசரகாலத்திற்கான அமைச்சர் தெரிவித்துள்ளதாவது வீடுகளை விட்டு தனிக்குடிசைகளில் வாழ்கின்றவர்கள் உடனடியாக வீடுகளுக்கு திரும்பவேண்டுமென தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வீட்டுத்தனிமைப்படுத்தல் சுகாதாரத்துறையால் வலியுறுத்தப்படுகின்றபோது அதனுடைய முக்கியத்துவத்தை மக்கள் மதிக்கப்பழகவேண்டும் எனவும் தெரிவித்துள்ளதோடு சுகாதாரத்துறையின் நிபந்தனைகளை மீறுகின்றவர்கள் அபாரத்தை கட்டவேண்டும் அல்லது சிறைசெல்ல நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏற்பட்டிருக்கும் தேசிய இடர் காரணமாக வெளிநாடுகளில் இருக்கின்ற நோர்வே வாழ் மக்கள் விரைவில் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த நாடுகளின் அரசுகளோடு நோர்வே அரசு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாகவும் விரைவில் பாதுகாப்போடு தாயகம் திரும்புவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.