வினாடியில் 1000 HD திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இணைய வசதி!

  • Post author:
You are currently viewing வினாடியில் 1000 HD திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இணைய வசதி!

வினாடியில் ஆயிரம் HD திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் வகையில் அதிவேக இணைய வசதியை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

சமீபத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட உலகின் இணைய உள்கட்டமைப்பில் ஏற்படும் அழுத்தங்களின் வெளிச்சத்தில், Dr Bill Corcoran (Monash), புகழ்பெற்ற பேராசிரியர் Arnan Mitchell (RMIT) மற்றும் பேராசிரியர் David Moss (Swinburne) ஒரு ஒளி மூலத்திலிருந்து வினாடிக்கு 44.2 டெராபிட் (Tbps) இணைய வேகத்தை பதிவு செய்துள்ளார்கள். கண்ணாடி சிப்பில் வழக்கமாக பயன்படுத்தப்படும் 80 லேசர்களுக்கு பதிலாக மைக்ரோ காம்ப் (micro comb) என்று அழைக்கப்படும் புதிய சாதனத்தை பொருத்தி, உலகின் இந்த அதிவேக இணைய வசதியை உருவாக்கி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தொழில்நுட்பம் மெல்போர்னில் 18 லட்சம் குடும்பங்களின் அதிவேக இணைய இணைப்புகளை ஆதரிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இது உச்ச காலங்களில் உலகெங்கிலும் உள்ள மெய்நிகர் நெரிசல்களின் சிக்கலையும் தீர்க்க முடியும்.

இந்த ஆய்வுக்காக, தற்போதுள்ள தகவல்தொடர்பு உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இந்த விரைவான வேகத்தை அடைந்துள்ளனர்.

80 லேசர்களை மாற்றும் மைக்ரோ சீப் (Microchip) என்ற புதிய சாதனத்தை அவர்கள் பயன்படுத்தினர், இது தற்போதுள்ள தொலைத்தொடர்பு வன்பொருளை விட சிறியதாகவும் இலகுவாகவும் இருக்கின்றது.

பகிர்ந்துகொள்ள