உக்ரைனியா ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கார் விபத்தில் சிக்கியதாகவும், ஆனால் அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர் Serhii Nykyforov வியாழன் அதிகாலை ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
ஜெலென்ஸ்கியின் வாகனம் உக்ரைன் தலைநகர் கீவில் சாலை விபத்தில் சிக்கிய பின்னர் அவர் ஒரு மருத்துவரால் பார்க்கப்பட்டார். அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என மருத்துபவரால் உறுதிசெய்யப்பட்டது.
ஆனால், மருத்துவர்கள் ஜெலென்ஸ்கியுடன் வந்த தனியார் காரின் ஓட்டுநருக்கு அவசர உதவி அளித்து அவரை ஆம்புலன்சில் ஏற்றியதாக Nykyforov கூறினார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அவரது அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே, தினசரி அடிப்படையில் இரவு நேர உரையின் வீடியோவை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டார்.