விமர்சனக் குரல்களை அமைதியாக்குவது ஜனநாயகத்தை குறைமதிப்புக்கு உட்படுத்தும்!

You are currently viewing விமர்சனக் குரல்களை அமைதியாக்குவது ஜனநாயகத்தை குறைமதிப்புக்கு உட்படுத்தும்!

விமர்சனக் குரல்களை அமைதியாக்குவது பொது விவாதம், சுதந்திரம் மற்றும் அனைவரின் மனித உரிமைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம வீட்டின் மீது நேற்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னணியில் இவ்வாறான கருத்தை ஹனா சிங்கர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை உறுதி செய்வதில் ஊடகவியலாளர்கள் மற்றும்  செயற்பாட்டாளர்கள் காத்திரமான பங்கை வகிக்கிறார்கள். கருத்து சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது எனவும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply