சூரிச்சிலிருந்து மியாமிக்குச் சென்ற LX66 இலக்க சுவிஸ் விமானம், அந்திலாந்தின் கடலின் நடுவே பயணம் செய்து கொண்டிருந்த போது திரும்பி, சில மணிநேரங்களுக்குப் பின்னர், மீண்டும் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
விமானிகளில் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பாதுகாப்பாக இருக்க, விமானக் குழுவினர் விமானத்தை திருப்ப முடிவு செய்தனர்.
சூரிச்சில் தரையிறங்குவது முற்றிலும் பாதுகாப்பானது அல்ல என்ற போதும் இந்த தரையிறக்கம் இடம்பெற்றுள்ளது.
ஏர்பஸ் A330 விமானத்தில் அதிகளவு எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.
ஏனைய விமானங்களைப் போலல்லாமல், இந்த விமானத்தில் எரிபொருளை வெளியேற்றுவதற்கான சாதனம் இல்லை.
இதன் விளைவாக, தரையிறக்கம் வழக்கத்தை விட அதிக எடையுடன் இடம்பெற்றது.
இது பிரேக்குகள் அதிக வெப்பமடைய வழிவகுக்கும்.
இதனால் விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
எனினும், பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.