விமான ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்த ரஷியா!

You are currently viewing விமான ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்த ரஷியா!

ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருந்த போதிலும் இருநாடுகளுக்கு இடையில் போர் முடிவுக்கு வரவில்லை.

தற்போது ஊடுருவல், எல்லையைத் தாண்டி தாக்குதல் போன்றவை இல்லை. ஆனால் டிரோன் தாக்குதல் அதிகரித்துள்ளது. அடிக்கடி இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைனில் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியம் அருகே உக்ரைன் ராணுவ வீரர்கள் கடந்த நான்கு நாட்களாக குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தெரிந்ததும் ரஷியா உடனடியாக அங்கு படைகளை அனுப்பியுள்ளது. மேலும், ஆயுதங்களையும் அனுப்பி வைத்துள்ளது. உக்ரைன் திடீரென குர்ஸ்க் பிராந்திய எல்லையில் வீரர்களை குவித்துள்ளதால் ரஷியா அங்கு அவசர பிரகடனம் அறிவித்துள்ளது.

உக்ரைன் இது தொடர்பாக விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் இன்று ரஷியா விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் கோஸ்டியன்டினிவ் பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த ஷாப்பிங் மால் மக்கள் நிறைந்த இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏவுகணை தாக்குதல் காரணமாக அப்பகுதியில் மேக அடர்ந்த கருப்பு நிறத்தில் காட்சியளித்தன.

மக்கள் வசிக்கும் இடத்தை குறிவைத்து மற்றொரு தாக்குல். இது ரஷியாவால் பயங்கரவாத தாக்குதல் என டொனெட்ஸ்க் பிராந்திய தலைவர் வேடிம் பிளாஷ்கின் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உக்ரைனின் எல்லைத் தாண்டிய சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என ரஷியா தெரிவித்துள்ளது. குர்ஸ்க் பிராந்தியத்தில் செயல்பாட்டு நிலை மிகவும் மோசமாக உள்ளது என அப்பிராந்திய பொறுப்பு கவர்னர் அலெக்செய் ஸ்மிர்னோவ் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply