விமான நிலையங்கள், துறைமுகங்களை மூடுகிறது நோர்வே! எல்லைகளில் கடும் பாதுகாப்பு!!

You are currently viewing விமான நிலையங்கள், துறைமுகங்களை மூடுகிறது நோர்வே! எல்லைகளில் கடும் பாதுகாப்பு!!

நோர்வேயின் பிரதான சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை மூடுவதாக நோர்வேயின் பிரதமர் “Erna Solberg” அம்மையார் அறிவித்தார்.

எதிர்வரும் திங்கள், காலை 08.00 மணியிலிருந்து இந்த நடைமுறை அமுலுக்கு வருவதாக தெரிகிறது. நிலைமைகள் நாளுக்குநாள் மோசமாகி வருவதால், கடுமையையான நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு தாம் தள்ளபட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பிரதான சர்வதேச விமானநிலையங்களும், எதிர்வரும் 16.03.2020 திங்கள் காலை 08.00 மணியுடன் மூடப்படுவதோடு, நாட்டின் எல்லைகளில் மிகக்கடுமையான காவல் பணிகள் மேற்கொள்ளப்படுமெனவும்….

குடியியல், உள்ளக பாதுகாப்புப்படைகளும், ஊர்காவல் படைகளும் பணிகளில் இறக்கப்படுமெனவும்…

நோர்வே விமானசேவை நிறுவனங்களான “SAS” மற்றும் “Norwegian” ஆகிய நிறுவனங்களின் விமானங்களின் மூலமாக, “கொரோனா வைரஸை எதிர்த்துப்போராடுவதற்கு தேவையான அத்தியாவசிய உபகரணங்களை சீனாவிலிருந்து  நோர்வேக்கு கொண்டுவரும் வழிவகைகள் ஆராயப்படுமெனவும்…

நோர்வே வெளியுறவுத்துறை குறிப்பிடும் ஆபத்தான நாடுகளுக்கான பயணங்கள், எதிர்வரும் “ஈஸ்டர்” தவக்காலம் வரை தடைசெய்யப்படுவதாகவும்..

விடுமுறைகளுக்காக, மலைக்குடிசைகளில் தங்கியிருப்பவர்கள் உடனடியாக வீடுகளுக்கு திரும்பவேண்டும் எனவும். பிரதமர் “Erna Solberg” அம்மையார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நோர்வே எல்லைகள் மூடப்படுவதால், வெளிநாடுகளிலிருந்து நோர்வே திரும்புபவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படாத நிலை தோன்றுவதற்கு வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள