விமான புகை காரணமாக பூமியில் வெப்பநிலை அதிகரிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

You are currently viewing விமான புகை காரணமாக பூமியில் வெப்பநிலை அதிகரிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

விமானத்திலிருந்து வெளிவரும் புகை காரணமாக பூமியில் வெப்பநிலை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. விமானங்களில் இருந்து வெளியேறும் புகை மேகங்கள் வானத்தில் ஒரு போர்வை போல செயல்படக்கூடும், இதன் விளைவாக பூமியில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த புகை மேகங்கள் குறைக்கப்பட்டால், பூமியின் வெப்பமயமாதலில் விமானத் துறையின் தாக்கம் 40 சதவீதம் குறையும்.

குளிர்ந்த, ஈரப்பதமான வான்வெளியில் விமானங்கள் பறக்கும்போது, தொடர்ச்சியான மேகங்கள் இருக்கும். இதை தவிர்க்க விமானங்கள் தங்கள் வழித்தடங்களை மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளதாகவும், அவற்றின் செயல்திறனை சோதிக்க விமானத் துறையை வலியுறுத்தியுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்களின் கூட்டு அறிக்கை கூறுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply