உக்ரைன் பயணிகள் விமானம் ஈரான் தலைநகர் தெஹ்ரான் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.
இந்நிலையில், அந்த விமானம் ஈரான் நாட்டு படைகளே தவறுதலாக சுட்டுவீழ்த்தியிருக்கலாம் என அந்நாட்டு ஊடகம் ஒன்று கூறி உள்ளது.
இது தொடர்பாக உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் தொழில் நுட்பகோளாறு தான் விபத்து ஏற்பட்டு உள்ளது என நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது. விழுந்தவுடன் விமானத்தில் தீ மளமளவென பயங்கரமாக எரிந்ததால் எங்களால் எந்த மீட்பையும் செய்ய முடியவில்லை. என்று ஈரானின் அவசர சேவைகளின் தலைவர் பிர்ஹோசீன் கவுலிவண்ட் அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
ஈரானின் சிவில் ஏவியேஷன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரேசா ஜாபர்சாதே, அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 176 என்று கூறினார். ( தகவல்: அல்- ஜெஸிரா)