விம்பிள்டன் வலைப்பந்து ரத்து : £100 மில்லியன் இழப்பீட்டுத் தொகை!

  • Post author:
You are currently viewing விம்பிள்டன் வலைப்பந்து ரத்து : £100 மில்லியன் இழப்பீட்டுத்  தொகை!

விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டாலும், காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து சுமார் 100 மில்லியன் பவுண்ட்ஸ் இழப்பீட்டு தொகையாக இந்த போட்டியை நடத்தக்கூடிய The All England Club’s க்கு கிடைக்க இருக்கின் றது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பழம்பெருமை வாய்ந்த விம்பிள்டன் வலைப்பந்து போட்டி லண்டனில் எதிர்வரும் ஜூன் 29-ந் திகதி முதல் ஜூலை 12-ந் திகதி வரை நடைபெறுவதாக இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் வலைப்பந்து போட்டி ரத்து செய்யப்படுவதாக The All England Club’s கடந்த வாரம் அறிவித்தது. 2-வது உலகப் போர் காலக்கட்டத்துக்கு பிறகு விம்பிள்டன் வலைப்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.

விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டதன் மூலம் சுமார் 200 மில்லியன் பவுண்ட்ஸ் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் இந்த போட்டிக்கு காப்பீடு செய்து இருந்ததால் பெரிய வருவாய் இழப்பில் இருந்து The All England Club’s தப்பி இருக்கின்றது.
2002-ம் ஆண்டில் சார்ஸ் வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து 2003-ம் ஆண்டு முதல் All England லான் வலைப்பந்து கழகம் , தொற்றுநோய் உள்பட எந்தவிதமான இயற்கை இடர்பாடாலும் பாதிக்கப்பட்டு விம்பிள்டன் போட்டி நடத்த முடியாமல் போனால் அதற்கு இழப்பீடு பெறும் வகையில் காப்பீடு செய்துள்ளது.

ஆகவே, காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து சுமார் 100 மில்லியன் பவுண்ட்ஸ் இழப்பீடு தொகையாக இந்த போட்டியை நடத்தக்கூடிய The All England Club’sக்கு கிடைக்க இருக்கின்றது.

பகிர்ந்துகொள்ள