நோய்வாய்ப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க மருத்துவர்கள் வேண்டுகோள்.
தடுப்பூசிகளுக்கான தேவை மிகவும் பெரிது என்பதால், நோய் ஆபத்து அதிகம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தேசிய பொது சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்றது.
ஒரு வாரத்தில் 14,200 தடுப்பூசிகள் விற்கப்பட்டன
கடந்த வாரம் புதன்கிழமை முதல் நேற்று வரை 14,200 Pneumokokk தடுப்பூசிகள் மருந்தகங்களிலிருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மருந்தியல் சங்கத்தின் தகவல் தொடர்பு மேலாளர் Jostein Soldal கூறியுள்ளார்.
தடுப்பூசியை யார் பெறுவார்கள் என்பதற்கான தேசிய பொது சுகாதார நிறுவனத்தின் புதிய வழிகாட்டுதல்கள் மருத்துவர்களிடமிருந்து நேரடியாக பொது சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பப்படும் உத்தரவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மருந்தகங்களுக்கு அல்ல என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
FHI இடம் தற்போழுது வரையறுக்கப்பட்ட அளவு தடுப்பூசிகளே உள்ளன!
பொது சுகாதார நிறுவனம் இப்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவு தடுப்பூசிகளையே கொண்டுள்ளது என்றும், மற்றும் மே மாதத்தில் புதிய விநியோகங்களை எதிர்பார்ப்பதாகவும், ஆனால்.., எதிர்காலத்தில் விநியோகங்களின் அளவு நிச்சயமற்றதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மீதமுள்ள தடுப்பூசிகள் குறிப்பாக, நிமோகோகல் நோய் (pneumokokksykdom – IPD) ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவ அறிகுறிகளைக் கொண்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
- எச்.ஐ.வி(HIV) தொற்று / எய்ட்ஸ் (Blå resept)
- Stamcell மாற்று அறுவை சிகிச்சை (Blå resept)
- உடற்கூற்றியல் அல்லது செயல்பாட்டு (miltmangel) மண்ணீரல் குறைபாடு (Blå resept)
- செரிப்ரோ கசிவு (Cerebrospinalvæskelekkasje)
- ‘பி’ உயிரணு செயலிழப்பு(B-cellesvikt)
- குருதியியல் புற்றுநோய் (leukemi, lymfom, myelomato
- உறுப்பு மாற்று சிகிச்சை (Organtransplantasjon)
தடுப்பூசி அதிகம் தேவைப்படுபவர்களுக்கு முடிந்தவரை இருப்பில் உள்ள தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் என்று Jostein Soldal மேலும் கூறியுள்ளார்.
ஆதாரம்/ மேலதிக தகவல்: Aftenposten