ஒஸ்லோவில் உள்ள Ellingsrudhjemmet வில் ஒரு கொரோனா மரணம் உட்பட இருவர் பாதிக்கப்பட்ட பின்னர், மொத்தம் 52 ஊழியர்கள் தனிமைப்படுத்தலில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று, ஒஸ்லோவில் உள்ள Ellingsrudhjemmetவில் வசித்துவந்த ஒருவர், கொரோனா தோற்றால் இறந்தது யாவரும் அறிந்ததே. இது நோர்வேயில் மூன்றாவது மரணமாகும்.
இப்போது Ellingsrudhjemmetவில் வசிப்பவர்கள் அனைவரும் மிகுந்த கண்காணிப்பில் உள்ளனர் என்றும், அவர்களில் எவருக்காவது கடின சுவாச அறிகுறிகள் இருந்தால், அவர்கள் உடனடிடாக கொரோனா நோய்த்தொற்று உள்ளதா என பரிசோதிக்கப் படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒஸ்லோவில் உள்ள அனைத்து மருத்துவ இல்லங்களுக்கும் இது பொருந்தும்.
ஒஸ்லோவிலுள்ள அனைத்து மருத்துவ இல்லங்களும் பார்வையாளர் வருகைக்கு மூடப்பட்டுள்ளன என்று மருத்துவ இல்ல நிர்வாகம் கூறியுள்ளது.
முக்கிய சந்தர்ப்பங்களில் மட்டுமே சில விதிவிலக்குகள் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் இருப்பினும், வருகை ஏற்பாடுகள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆதாரம்/ மேலதிக விபரம்: Dagbladet