பூநகரி–பரந்தன் வீதியூடாக தனிமையில் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு எச்சரிக்கைப்படுகின்றனர்.
குறித்த வீதியில் குடமுருட்டி பாலத்தை அண்மித்த பகுதி உள்ளிட்ட சில குடியிருப்பு அற்ற பகுதிகளில் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
வீதி ஓரத்தில் மோட்டார் சைக்கிள் அல்லது சைக்கிள்களில் நிற்கும் நபர்கள் வீதியால் தனியே பயணிப்பவர்கள், பெண்களை அச்சுறுத்தி வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
தற்போது ஊரடங்கும் அமுலில் உள்ளதால் குறித்த வீதி ஊடாக பயணிப்போரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதனால் வழிப்பறி கொள்ளையர்களும் அதிகரித்துள்ளனர்.இவ்வாறு நேற்றைய தினம்(24) அரச ஊழியர் ஒருவர் வழிமறிக்கப்பட்டபோதும் அவர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார்.
மேலும் இந்த வழிப்பறிகளால் வீதியில் வாழ்வாதாரத்துக்காக பாலைப்பழம், ஈச்சம்பழம்,கயூபழம்,நாவல் பழம் என விற்பனை செய்பவர்களின் வியாபாரத்தில் பாதிப்பு உருவாகப்போகிறது.