வீழந்த இடத்தில் இருந்து விடுதலைக்கான பயணத்தினை தொடங்கிய முன்னணி!

You are currently viewing வீழந்த இடத்தில் இருந்து விடுதலைக்கான பயணத்தினை தொடங்கிய முன்னணி!

வீழந்த இடத்தில் இருந்து விடுதலைக்கான பயணத்தினை தொடங்கிய முன்னணி!
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீழ்ந்த இடத்தில் இருந்து விடுதலைக்கான பயணத்தினை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து உறுதி உரை எடுத்து ஆரம்பித்துள்ளார்கள்.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செ.கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் தொண்டர்கள் இறுதிப்போரின் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தி உறுதி உரை எடுத்து அரசியல் பயணத்தினை தொடங்கியுள்ளார்கள்.
அவர்கள் உறுதி உரையின் போது..
உள்ளக வெளியக சவால்களை சந்தித்த பின்னும் தமிழ்த் தேசியப் போராட்டம் நீட்சி பெற்றுள்ளது. 
காலநீட்சியில் படிமுறை ரீதியாக மாற்றங்களை கண்டபோதும் இலக்கு மாறமால், புதிய பரிமாணத்தோடு எமது இலட்சியப் போராட்டம் தொடர்கிறது. 
அதன் சாட்சியாக இங்கே அணிதிரண்டு நாங்கள் நிற்கின்றோம்.வரலாறு வழிகாட்ட, காலத்தின் கட்டளைக்கு ஏற்ப வரலாற்றுப் பொறுப்பை சுமந்துள்ள நாம், ‘தேச நிர்மாணிப்பாளர்களாக’ நிலைமாற்றம் அடைய கடந்த கால தியாகங்களை மனதிலிருத்தி உறுதிகொள்கிறோம். 
ஆத்மார்த்தரீதியாக எம்மை எமது போராட்டத்தோடு இணைத்து, எமது விடுதலைக்கான போராட்டம் சந்தித்துள்ள தடைகளை தகர்த்து, தமிழ்த் தேசத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் மீட்க தொடர்ந்தும் அர்ப்பணிப்போடு போராடுவோம் என உறுதிகொள்கிறோம்.
சுதந்திர வேட்கையையும் இலட்சிய தாகத்தையும் எங்களுடைய சந்ததிக்கு எடுத்து செல்வதற்கு திடம்கொள்வதோடு, எமக்கு தரப்பட்ட பணிகளை, எத்தடை வரினும் முறியடித்து முன்னகர்த்த உறுதிகொள்கிறோம்
  என உறுதி உரையினை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்கு கூடிய பெருமளவான ஆதரவாளர்கள் உறுதி உரை எடுத்து அரசியல் பயணத்தினை தொடங்கியுள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள