வீழ்ந்தது சிரியா! அதிபர் அஸாத் நாட்டை விட்டு வெளியேற்றம்!!

You are currently viewing வீழ்ந்தது சிரியா!  அதிபர் அஸாத் நாட்டை விட்டு வெளியேற்றம்!!

சிரிய தலைநகரான டமஸ்கஸ், சிரிய கிளர்ச்சிப்படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து , சிரிய அதிபர் அஸாத் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், ஆட்சியதிகாரத்தை கிளர்ச்சிப்படைகளிடம் அமைதியான முறையில் கையளிப்பதற்கு அவர் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவிக்கிறது.

பல்லாண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்ற சிரிய உள்நாட்டுபோரில், அரசுக்கெதிரான கிளர்ச்சிப்படைகள் தலைநகரை கைப்பற்றியுள்ளதுடன், அரசாங்கத்தை தாம் முழுமையாக கைப்பற்றியுள்ளதாகவும், அரச படைகளையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகவும் அறிவித்துள்ளன .

இந்நிலையில், நாடு முழுவதும் அவசரகால நிலையும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ள அதேநேரம், நாட்டை விட்டு வெளியேறியுள்ள முன்னாள் அதிபர் அஸாத், அவரது தோழமை நாடான ரஷ்யாவுக்கு அடைக்கலம் தேடி சென்று கொண்டிருப்பதாக மேற்குலக செய்தியூடங்கள் தெரிவிக்கின்றன .

புகைப்படம்: AFP  

மேம்பாடு:

நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் சிரிய அதிபர் அஸாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ரஷ்யாவில் மனிதாபிமான அடிப்படையில் புகலிட அந்தஸ்து வழங்கப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாக பிந்திக்கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன .  

பகிர்ந்துகொள்ள

Leave a Reply