சோமாலியாவில் வெட்டுக்கிளிகளால் பேரழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சோமாலியாவில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து உள்ளன. இவை விவசாய பயிர்களை தாக்கி பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அந்த நாட்டின் ஜூபா நதியின் படுகையில் செழிப்பாக வளர்ந்து நிற்கும் பயிர்களுக்கு இந்த வெட்டுக்கிளிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன..
இதன் காரணமாக அந்த நாட்டு அரசு தேசிய அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. போர்க்கால அடிப்படையில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர். அந்த நாட்டில் ஏப்ரல் மாதம் அறுவடை காலம் என்பதால் அதற்குள் நிலைமை கட்டுக்குள் வருமா என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
குறிப்பு:-
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ என்ற படத்தில் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்க பெருநிறுவனம் ஒன்று வெட்டுக்கிளிகளை ஏவி விடும்.
அண்மையில் குஜராத் மாநிலத்தில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து விவசாய நிலத்தை அளித்தன. அப்போது அந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானால் அனுப்பப்பட்டவை என குற்றம் சாட்டி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.