50 வருட காலமாக புனரமைக்கப்படாத தமது பாடசாலைக்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு நேற்றைய தினம் புதன்கிழமை வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்திற்கு வருகை தந்த வட மாகாண ஆளுநரின் செயலாளர் நந்தகோபன் மாணவர்கள் வெயில் நின்று போராடிய நிலையில் அவர்களை சென்று சந்திக்காமல் நிழலில் நின்று போராட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பியதை அவதானிக்க முடிந்தது.
அது மட்டுமல்லாது நீங்கள் ஏன் வந்தீர்கள் என தனக்கு தெரியாது என பதில் வழங்கியதுடன் மாணவர்களை வெயிலில் நிற்க வேண்டாம் நிழலில் அழைத்து வாருங்கள் என கூறினார்.
இதன் போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள் எங்கள் வீதிப் பிரச்சினை தொடர்பில் ஆறு மாதங்களுக்கு முன் ஆளுநருக்கு எழுத்து மூலம் தெரிவித்தோம் ஆனால் ஆளுநரின் செயலாளர் நீங்கள் ஏன் வந்தீர்கள் என தனக்கு தொரியாது எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்தனர்.