மருதங்கேணி சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்கரை பகுதியில் இருந்து பெருமளவிலான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்த மீட்பு சம்பவமானது இன்று காலை(24.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கஞ்சா பொதிகள் கைமாற்றப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கடற்படையினரால் இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகள் 86.7 கிலோ எடையுடையவை என கூறப்படுகிறது.
சிறீலங்கா கடற்படையினர் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை நேற்று முன் நாளும் வெற்றிலைக்கேணியில் 165 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒருவர் வெற்றிலைக்கேணியை சேர்ந்தவர் எனவும் மற்றவர் வத்திராயனை சேர்ந்தவர் எனவும் தெரிய வருகின்றது.
அதேவேளையில் வடமராட்சி கிழக்கில் மீண்டும் கஞ்சா கடத்தல் தலை தூக்கியுள்ளதால் சிறீலங்கா கடற்படையினர் மேலதிகமாக கரையோரங்களில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.